கனமழை தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு இமாச்சல் அரசு அறிவுரை

#India #people #government #Rain #Breakingnews
Mani
2 years ago
கனமழை தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு இமாச்சல் அரசு அறிவுரை

டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் உள்ளிட்ட வட இந்தியாவின் பல நகரங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கனமழையால் வட இந்தியாவின் பல மாநிலங்களில் ரயில் மற்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, வடகிழக்கு மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுவிந்தர் சிங் சுஹா கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!