விகாரைகளில் இடம்பெறும் விடயங்களை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
விகாரைகளில் இடம்பெறும் விடயங்களை அம்பலப்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

விகாரைகளில் இடம்பெறும்  சில சம்பவங்களை சமூகத்திற்கு தேவையில்லாமல் பிரசாரம் செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார்.  

கடுவெல, நவகமுவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தாம் அறிந்தவுடன் பொலிஸாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்ததாகவும், பொலிஸார் விரைந்து செயற்பட்டு சந்தேக நபர்களை கைது செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன்  அந்த சம்பவத்தில் பிக்குவின் நடத்தை மற்றும் பிக்கு உட்பட இரு பெண்கள் வெளி தரப்பினரால் தாக்கப்பட்டமை தவறானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான சம்பவங்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்துவது பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் கூறினார். 

மேலும் இவ்வாறான செயற்பாடுகளால், ஏனைய பிக்குகளும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிட்ட அவர்,  விகாரையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும், அந்த விடயத்தில் புத்த சாசன அமைச்சு தலையிடாது எனவும் அவர்கூறியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!