காங்கேசன் துறைமுகத்தின் ஊடாக போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க அனுமதி!

#Lanka4
Thamilini
2 years ago
காங்கேசன்  துறைமுகத்தின் ஊடாக போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க அனுமதி!

காங்கேசன்துறைமுகத்தின் ஊடாக இந்தியாவுக்கான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் திட்டத்திற்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளது.  

இத்திட்டத்தின் மூலம் இலங்கை  மற்றும் இந்தியாவிற்கு இடையில் இலகுவாக பயணம் செய்யலாம் என விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்  பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார். 

மேலும், பயணிகள் ஒரே நேரத்தில் 100 கிலோ எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், இந்த திட்டத்திற்கும் இன்னும் இந்தியா அனுமதியளிக்கவில்லை. ஆகையால் இந்த திட்டம் மேலும் 06 மாதங்கள் தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!