19 கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் - சுசில் பிரேமஜயந்த
கல்வித் திணைக்களத்தில் உள்ள 19 கல்லூரிகளும் எதிர்வரும் காலங்களில் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பத்தனை ஸ்ரீ பாத கல்வியியற் கல்லூரியிற்கு கண்காணிப்புச் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்படி, எதிர்காலத்தில் கல்லூரிகளுக்கான ஆட்சேர்ப்பு 3 வருடங்களுக்கு அல்ல, 4 வருடங்களுக்கு நடைபெறும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளப்படுவார்கள் எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
மாணவர் சங்கங்கள் அமைப்பதற்கு இடமில்லை. என்று கூறிய அவர்,இந்த விடயத்தை அமைச்சரவையில் முன்வைத்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவை கல்வி அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.