ரஷ்ய உளவாளி ஒருவர் போலந்தில் கைது!
#world_news
#Russia
#Lanka4
Thamilini
2 years ago
மற்றுமோர் ரஷ்ய உளவாளி போலந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போலந்து உள்துறை அமைச்சர் மாஸ்கோ நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சந்தேக நபர் இராணுவ வசதிகள் மற்றும் துறைமுகங்களை கண்காணித்து வந்தார். அவருக்கு ரஷ்யர்கள் முறையாக பணம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த மாதமும் ரஷ்ய உளவாளி ஒருவரை கைது செய்திருந்தது. அவர் அங்கு நாசவேலைகளை செய்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போலந்து அதிகாரிகள் அதன் Swinoujscie திரவ இயற்கை எரிவாயு முனையத்தைச் சுற்றி 200 மீட்டர் பாதுகாப்புமண்டலத்தை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.