உள்ளூர் முட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது - சரத் ரத்நாயக்க
#SriLanka
#prices
#Egg
#Lanka4
Kanimoli
2 years ago
உள்ளூர் முட்டைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான உள்ளூர் தேவை 10% அதிகரித்து, முட்டை உற்பத்தி 30 லட்சத்தில் இருந்து 50 லட்சமாக அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இறைச்சி மற்றும் மீனின் விலை அதிகரிப்பினால் முட்டைக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக முட்டையின் விலை அதிகரித்துள்ளதாகவும்,
எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேவை குறைவடைந்ததன் பின்னர் மீண்டும் முட்டையின் விலை குறைவடையும் எனவும் சரத் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.