அஜித் ரோஹன சமர்ப்பித்த மனுவை எதிர்வரும் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவு
#SriLanka
#Court Order
#Ajith Rohana
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
தன்னை இடமாற்றம் செய்வதற்கு பொது பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சமர்ப்பித்த மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரியந்த ஜயவர்தன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதையடுத்து, வரும் 17ம் திகதி நீதிமன்ற பரிசீலனைக்கு அழைக்க உத்தரவிடப்பட்டது.