மன்னார் மாவட்டத்திலே வருடாந்த பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு
#SriLanka
#Mannar
#Police
#Lanka4
#இலங்கை
#பொலிஸ்
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
இன்று மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு மன்னார் பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் காலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.
அதன் போது மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.வை.ஏ.எஸ். சந்திரபால பரிசீலனைகளை மேற்கொண்டதோடு, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதன் போது பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சி.பி ஹேரத், உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகே, மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மன்னார் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்கு பற்றுதலுடன் இடம்பெற்றது.
இந்த அணிவகுப்பு மரியாதையானது மன்னார் நகரின் ஊடாகவும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.