கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் இந்திய வம்சாவளியினரும் போராட்டத்திலே முறுகல்

கனடாவில் உள்ள இந்திய துாதரகத்திற்கு முன்பாக இந்திய வம்சாவளியினர் தேசிய கொடியை ஏந்திய வண்ணம் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர்.
கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பாக தேசிய கொடியை ஏந்தி இந்திய வம்சாவளியினர் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், இந்திய தூதரக அலுவலகத்துக்கும், தூதரக அதிகாரிகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரி கோஷங்களை எழுப்பினர். அவர்களுக்கு எதிர்நிலையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் போரட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
‘‘பாரத் மாதா கி ஜே’’, ‘‘வந்தே மாதரம்’’, ‘‘இந்தியா வாழ்க’’, ‘‘காலிஸ்தான் முர்தாபாத்’’ போன்ற முழக்கங்களை எழுப்பினர்.மேலும், ‘‘காலிஸ்தானிகள் சீக்கியர் அல்ல’’ “கனடா காலிஸ்தானியை ஆதரிப்பதை நிறுத்துங்கள்’’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்டபதாகைகளை ஏந்தி இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேநேரம், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியதேசிய கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டனர்.



