சீனாவில் முன்பள்ளியில் நடந்த அசம்பாவிதம்! ஆறு பேர் உயிரிழப்பு
#China
#world_news
Mayoorikka
2 years ago

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இன்று (10) காலை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 25 வயது இளைஞனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
லியான்ஜியாங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலின் லியான்ஜியாங்கைச் சேர்ந்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



