சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன - வைத்தியர் ஹரித அளுத்கே!
சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. இப்பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர், சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன எனவும், மருந்தை பெற்றுக்கொள்வதிலும், மருத்தின் தரம் குறித்தும் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
பதிவு செய்யப்படாத மருந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளமையால் பிரச்சினைகள் எழுந்துள்ளது. மேலும் விலைமனு செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறுவதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும்போது அதன் பிரதிபலன்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனக் கூறிய அவர், இருப்பினும் அவை மக்களை சென்றடைவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன் வைத்திய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதும் புதிதாக நியமனம் பெறும் வைத்தியர்கள் கூட நாட்டை விட்டு வெளியேற நினைப்பதும் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.