மல்லாவியில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் உயிரிழப்பு!
#SriLanka
#Lanka4
#GunShoot
Thamilini
2 years ago
மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீதவான் விசாரணைக்காக சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.