அம்பன்பொல பிரதேசத்தில் பேருந்து விபத்து : இருவர் பலி, 29 பேர் காயம்!
#SriLanka
#Accident
#Bus
#Lanka4
Thamilini
2 years ago
அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கூரகலவில் இருந்து ஹோமனா நோக்கி பயணித்த பேருந்து அம்பன்பொல பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலனுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு ஆணும் அம்பன்பொல வைத்தியசாலையிலும், மேலும் 18 பெண்களும் நான்கு ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இந்த சம்பவத்தில், தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரும் 71 வயதுடைய ஒருவரும்உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.