மனம்பிடிய பாலத்தில் பேருந்து விபத்து: பத்துப் பேர் உயிரிழப்பு
#SriLanka
#Death
#Accident
Mayoorikka
2 years ago
பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று மனம்பிடிய, கொத்தலிய பாலத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாக்கியத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் 40க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில்,பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்து வெளியே எடுக்கப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளது.

