தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து விபத்து: 26 பேர் காயம்
#SriLanka
#Accident
#Bus
Prathees
2 years ago
தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
விபத்தில் பேருந்தில் பயணித்த தோட்டத் தொழிலாளர்கள் 26 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை வட்டகொட நகரில் இருந்து புடலுஓயா துனுகெதெனிய நோக்கி தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இன்று மாலை 4.30 மணியளவில் வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண்களில் பலத்த காயமடைந்த தோட்ட தொழிலாளர்கள் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறே விபத்துக்குக் காரணம் என புடலுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.