வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்
#India
#Delhi
#Rain
#HeavyRain
#Mumbai
Mani
1 year ago

வட இந்தியாவின் பல நகரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது.
இதனால் பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.



