சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலம் மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, இன்று (09) முதல் அமுலுக்கு வரும் வகையில் சி.டி. திரு.விக்கிரமரத்னவுக்கு 03 மாதங்களுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் ஆகியோருக்கிடையில் இன்று (07.09) கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது அமைச்சர் திரன் அலஸ் சி.டி. விக்கிரமரத்னவின் சேவையை நீட்டிக்குமாறு பரிந்துரைத்துள்ளார். இதற்கமைய அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.