கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என கம்போடியா கோரிக்கை!
#world_news
#War
#Lanka4
Thamilini
2 years ago
கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்த வேண்டாம் என கம்போடியாவின் பிரதம மந்திரி உக்ரைனிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
1970 களின் முற்பகுதியில் அமெரிக்காவால் கைவிடப்பட்ட சர்ச்சைக்குரிய ஆயுதங்களின் எச்சங்களை இன்னும் கையால்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"உக்ரைன் பிரதேசத்தில் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டால், அது பல ஆண்டுகளாக அல்லது நூறு ஆண்டுகள் வரை உக்ரைனியர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்" எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கம்போடியாவில் இவ்வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டு அரை நூற்றாண்டுகளை கடந்துவிட்டது. இருப்பினும் அந்த குண்டுகளை அழிக்க முடியவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.