ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து 500 குழந்தைகள் உயிரிழப்பு!
#world_news
#War
#Lanka4
#Russia Ukraine
Dhushanthini K
2 years ago

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ஏறக்குறைய 500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும், உக்ரைன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
"இந்த எண்கள் இறுதியானவை அல்ல. தற்காலிகமாக ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் போர் நடக்கும் இடங்களில் அவற்றை நிறுவும் பணி தொடர்கிறது" என்றும் அந்த அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியே அதிக குழந்தைகள் உயிரிழக்கும் இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை 97,314 ஆக்கிரமிப்பு மற்றும் போர்க் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.



