அம்பாறையில் மாயமான 16 வயது சிறுமி!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
அம்பாறை கல்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சச்சினி சவிநத்யா சமரதுங்க என்ற 16 வயது சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
குறித்த மாணவி கடந்த 28ஆம் திகதி பாடசாலைக்கு சென்றுள்ளார் ஆனால் பாடசாலை பதிவேட்டில் பெயர் பதியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு அளித்துள்ளனர். இருப்பினும் குறித்த மாணவி காணாமல்போய் 12 நாட்கள் கடந்துள்ள நிலையில், அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.