கலிபோர்னியாவில் ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 06 பேர் பலி!
#Accident
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
கலிபோர்னியாவில் ஜெட் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (ஜுலை 08) இடம்பெற்றுள்ளதாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Cessna C550 என்ற வணிக ஜெட் விமானம், லாஸ் வேகாஸில் இருந்து பயணத்தை ஆரம்பித்த நிலையில், 85 மைல் தொலைவில் பிரெஞ்சு பள்ளத்தாக்கு விமான நிலையம் அருகே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஆறுபேரும் பலியாகியுள்ளனர்.தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விபத்து குறித்து விசாரிக்கும் என்று FAA தெரிவித்துள்ளது.