ஸ்பெயனில் கடும் வெள்ளத்தில் சிக்கிய மக்கள்!
#world_news
#Lanka4
Dhushanthini K
2 years ago

ஸ்பெயினின் வடகிழக்கு நகரமான ஜராகோசாவில் வெள்ளிக்கிழமை முதல் பாரிய புயல் மற்றும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள், காணாமல்போனவர்கள் பற்றிய தவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மழை வெள்ளம் காரணமாக பேருந்து சேவை வழித்தடங்கள் மாற்றப்பட்டதாகவும், கூறப்படுகிறது.
ஸ்பெயின் அதிகாரிகள் அவசரகால சேவைகளை வழங்கி வருவதாகவும், மீட்பு குழுவினர் முழு வீச்சில் பணியாற்றி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.



