சூடானில் வான்வழித் தாக்குதல் : 22 பேர் உயிரிழப்பு!

சூடானில் இராணுவ பிரிவுகளுக்கு இடையில் நடைபெற்று வருகின்ற போர் 12 ஆவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று (ஜுலை 08) ஓம்டுர்மானில் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள கார்டூம் சுகாதார அமைச்சகம், ஏப்ரல் 15 அன்று நடந்த சண்டைக்கு பிறகு துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகள் (RSF) தலைநகர் கார்ட்டூம் மற்றும் அதன் சகோதர நகரங்களான ஓம்டுர்மன் மற்றும் பஹ்ரி மீது விரைவாக ஆதிக்கம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இதுவரையில் சமரசம் ஏற்படாத நிலையில், தற்போது வெடித்துள்ள மோதல் நிலை, உள்நாட்டு போராக மாறும் வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த மோதில் இதுவரை மொத்தமாக 1133 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏராளமானோர் காயமடைந்த நிலையில், சுமார் ஏழு இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.



