செயலிழந்த சி.டி ஸ்கேன்களால் சிக்கலில் உள்ள வைத்தியசாலை நிர்வாகம்!
அரச வைத்தியசாலைகளில் 44 CT ஸ்கேன், 13 MRI ஸ்கேன் , 02 PET ஸ்கேன் இயந்திரங்கள் உள்ளதாகவும், ஆனால் அவை தற்போது செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலை கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “13 எம்.ஆர்.ஐ இயந்திரங்களில் இரண்டு வேலை செய்யவில்லை. பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில் உள்ள இயந்திரம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பழுதடைந்துள்ளது.
தற்போது சிறு பிள்ளைகளுக்கு எம்.ஆர்.ஐ பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. அநுராதபுரம் வைத்தியசாலையில் உள்ள எம்.ஆர்.ஐ இயந்திரம் ஜனவரி மாதம் முதல் பழுதடைந்துள்ளது. இதுவரை இயந்திரம் சீரமைக்கப்படவில்லை.
அனுராதபுரம் மருத்துவமனையில் ஓராண்டுக்கு மேலாக காத்திருப்பு பட்டியல் உள்ளது.43 சி.டி ஸ்கேன் இயந்திரங்களில் 12 இயந்திரங்கள்பழுதடைந்துள்ளன. இன்றைய நிலவரப்படி ஒரு சி.டி.ஸ்கேன் இயந்திரம் கூட இயங்கவில்லை.
தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள CT இயந்திரம் செயலிழந்துள்ளது." அந்த இயந்திரங்களின் சேவை ஒப்பந்த காலம் முடிவடைந்ததால், பழுதடைந்த இயந்திரங்களை சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்கேன் செய்ய முடியாமல் மருத்துவர்களும் கடும் சிரமத்தில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.