கொழும்பு 07 இல் பதற்றம் : 26 பேர் கைது!
#Arrest
#Lanka4
Thamilini
2 years ago
கொழும்பு 07 இல் அமைந்துள்ள வீடொன்று தொடர்பில் இருக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்துள்ளது.
இந்த சம்பவத்தின்போது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பதற்றத்தை கட்டுப்படுத்தி 26 பேரை கைது செய்துள்ளதுடன், சந்தேக நபர்களை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.
இவ்விரு குகுழுக்களும் பல சந்தர்ப்பங்களில் வீட்டின் உரிமைக்காக மோதிக்கொண்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குறித்த வீடு இருவருக்கும் சொந்தமானது அல்ல என பொலிஸார் கூறியுள்ளனர்.