கையிருப்பு ரசாயன ஆயுதங்களை வெற்றிகரமாக அழித்து விட்டோம் - அமெரிக்கா

#America #Weapons
Prasu
2 years ago
கையிருப்பு ரசாயன ஆயுதங்களை வெற்றிகரமாக அழித்து விட்டோம் - அமெரிக்கா

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோணி பிளிங்கன் ''கையிருப்பு ரசாயன ஆயுதங்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளது. இது ரசாயன ஆயுத மாநட்டின் கீழ் மிகப்பெரிய முன்னேற்றத்தை குறிக்கிறது'' என்றார்.

இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ''அமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள இறுதி ரசாயன ஆயுதங்களை பாதுகாப்பாக அழித்துவிட்டது என்பதை அறிவிப்பதில் நான் பெருமை அடைகிறேன். 

ரசாயன ஆயுதங்களின் கொடூரங்கள் இல்லாத உலகத்திற்கு நம்மை ஒருபடி நெருக்கமாக கொண்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட பேரழிவு ஆயுதங்களின் முழு வகையையும் அழித்ததை ஒரு சர்வதேச அமைப்பு இது முதல் தடவையாக குறிக்கிறது'' என்றார்.

 அமெரிக்கா தன்னிடம் இருந்த கடைசி ரசாயன ஆயுதமான எம்.55 ராக்கெட்டுகளை கென்டக்சி பகுதியில் வைத்து அழித்துள்ளது. ரசாயன ஆயுதங்களை அகற்றுவதற்கு அமெரிக்காவிற்கு செப்டம்பர் 30-ந் தேதி வரை காலக்கெடு இருந்தது. அதற்கு முன்பே ஆயுதங்களை அழித்து விட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!