சுகாதாரத் துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கண்டிக்கப்பட்ட அமைச்சர் கெஹலிய உட்பட அதிகாரிகள்
சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் கண்டிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் அலட்சியப்போக்கு நோயாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் மன்னிக்கப்படக் கூடாது என சிரேஷ்ட சுகாதார அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்கவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தெளிவாகியுள்ளது
. "மாறாக, பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆறுதல் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்" என்று ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
கலந்துரையாடலின் போது, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை, மருந்துகளின் தரம் பற்றிய கவலைகள் மற்றும் கொள்முதல் செயல்பாட்டில் உள்ள சவால்கள் போன்ற பகுதிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
சுகாதார அமைச்சு எதிர்நோக்கும் நிதிச் சிக்கல்களை நிவர்த்தி செய்வதற்கு சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.