மயிரிழையில் தப்பிய டக்ளஸ்: 19 வருடங்கள் பூர்த்தி! இறந்தவர்களுக்கு அஞ்சலி

#SriLanka #Douglas Devananda
Mayoorikka
2 years ago
மயிரிழையில் தப்பிய டக்ளஸ்: 19 வருடங்கள் பூர்த்தி! இறந்தவர்களுக்கு அஞ்சலி

கடந்த 2004ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி அவரை கொலை செய்ய எடுத்த முயற்சி நேற்றுடன் 19 ஆகின்றது.

 இந்த தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு டக்ளஸ் தேவானந்தா நேற்று அஞ்சலி செலுத்தினார்.

 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்யும் நோக்கில் 2004ஆம் ஆண்டு ஜூலை மாதம் 07ஆம் திகதி, பம்பலபிட்டி பகுதியிலிருந்த அவரது அலுவலகத்திற்குள் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

 இந்த குண்டுத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்திருந்தனர்.

 இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட செல்வகுமாரி சத்தியலீலாவிற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!