சாவகச்சேரியில் கிணற்றுக்குள் மோட்டார் குண்டுகள்
#Jaffna
#spiritual
#இலங்கை
#லங்கா4
#யாழ்ப்பாணம்
Mugunthan Mugunthan
2 years ago
இன்று சாவகச்சேரியில் தச்சன்தோப்பு பகுதியில் காணியை சுத்தம் செய்யும் போது மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் இன்று (8) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் உள்ள கிணற்றினை காணியின் உரிமையாளர் சுத்தம் செய்யும்போதே இந்த மோட்டார் குண்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.