மகளின் காதலால் உயிரிழந்த தந்தை

#SriLanka
Prathees
2 years ago
மகளின் காதலால் உயிரிழந்த தந்தை

அவிசாவளை, படுவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

 உயிரிழந்தவரின் மகளும் தாக்கப்பட்டு அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இவர்களது வீட்டில் தங்கியிருந்த இளைஞன் ஒருவர் மகளுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த இளைஞன் கூரிய ஆயுதத்தால் யுவதியை தாக்கியுள்ளார்.

 குறுக்கிட்ட சிறுமியின் தந்தையையும் அந்த இளைஞன் தாக்கியுள்ளார். 60 வயதான தந்தை சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

 சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதுடைய சந்தேக நபர் அவிசாவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!