கொத்துக்குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா - பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன?

#world_news #War #Lanka4
Dhushanthini K
2 years ago
கொத்துக்குண்டுகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா - பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன?

உக்ரைனுக்கு கொத்துக் குண்டுகளை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். 

உக்ரைனுக்கு உதவ பிரித்தானியா தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ள ரிஷி சுனக், நீண்ட தூர தாக்குதல் ஆயுதங்கள் உள்ளிட்ட பிற உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

ரஷ்யாவின் சட்டவிரோத மற்றும் தூண்டப்படாத படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவளிக்க நாங்கள் தொடர்ந்து எங்களின் பங்களிப்பைச் செய்வோம், ஆனால் கனரக போர் டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஆயுதங்களை வழங்குவதன் மூலம் நாங்கள் அதைச் செய்துள்ளோம் எனவும் அவர் கூறினார். 

கொத்துக்குண்டுகள் பயன்படுத்துவதை தடை செய்யும் 123 நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று என்பதை ரிஷி சுனக் சுட்டிக்காட்டியுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!