டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

#India #Delhi #Rain #Breakingnews
Mani
2 years ago
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருவதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள சப்தர்ஜங் வானிலை மையம் மதியம் 2.30 மணி வரை 98.7 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதே நேரத்தில் ரிட்ஜ் மையத்தில் 111.4 மிமீ மழை பதிவாகியுள்ளது.

மேலும், டெல்லி மற்றும் என்சிஆர், யமுனா நகர், குருக்ஷேத்ரா, கர்னால், அஷாந்த், பானிபட், கோஹானா, கன்னார், மெஹம், சோனிபட், ரோஹ்தக், கர்கோடா, பிவானி, சர்க்கி தாத்ரி, மட்டன்ஹைல், ஜஜ்ஜார், கோஸ்ஸாவின்பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!