ரஷ்யாவுடன் உறவுகளை ஆழப்படுத்துவதால் பொருளாதார அச்சுறுத்தல் ஏற்படும் - பைடன்!

ரஷ்யாவுடனான உறவுகளை வலுப்படுத்துவதால் சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மேற்கத்திய முதலீட்டுடன் தொடர்புடைய சாத்தியமான பொருளாதார அபாயங்களை மேற்கோள் காட்டி ரஷ்யாவுடனான உறவுகளை ஆழப்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் சீன மற்றும் ரஷ்ய தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பை அடுத்து, இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகள், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மீதான வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் சீனாவின் அரசு தலைமையிலான தொழில் கொள்கை உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே வளர்ந்து வரும் பதற்றம் மற்றும் அவநம்பிக்கையை ஜனாதிபதி பைடனின் நேர்காணல் பிரதிபலித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கைகளை ஆரம்பித்த பிறகு, 600 அமெரிக்க நிறுவனங்கள், ரஷ்யாவில் இருந்த வெளியேறியதை பைடன் சுட்டிக்காட்டியுள்ளார்.



