வந்தே பாரத் ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைப்பு என ரெயில்வே வாரியம் அறிவிப்பு

#India #Railway #Train #information #Breakingnews
Mani
2 years ago
வந்தே பாரத் ரெயில்களில் ஏ.சி. பெட்டிகளுக்கான கட்டணம் குறைப்பு என ரெயில்வே வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி:

இந்தியாவின் பல்வேறு மாநில வழித்தடங்களில் 'வந்தே பாரத்' ரயில் இயக்கம் தொடங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், வந்தே பாரத் ரயில்களின் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதனை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்நிலையில், 'வந்தே பாரத்' உள்ளிட்ட சில ரயில்களில் ஏ.சி. ரயில் பெட்டிகளுக்கான கட்டணத்தை குறைப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி இதன்படி ஏ.சி. சேர் கார் மற்றும் எக்ஸிகியூட்டிவ் வகுப்பு கட்டணம் 25% வரை குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 50 சதவீதத்திற்கும் குறைவானோர் பயணிக்கும் ரயில்களில் கட்டணச் சலுகை அளிக்கவும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!