நேபாளத்தில் பரவி வரும் மர்ம நோய் குறித்து எச்சரிக்கை!
#world_news
#Lanka4
#Nepal
Thamilini
2 years ago
நேபாளத்தின் கலிகோட்டில் பகுதியில் மர்ம நோய் பரவி வருவதாகவும், இதற்கு 300 பேர் இலக்காகியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொவிட் தொற்றுநோயின் அறிகுறிகளை ஒத்த தன்மை இந்த நோயிற்கும் இனங்காணப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதனையடுத்து குறித்த பகுதியில் வைத்திய நிபுணர் குழு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் பெண்கள் மற்றும் குழந்தைகளை அதிகமாக தாக்கும் இந்த நோய் எதனால் பரவுகிறது என்பது தொடர்பில் தகவல்கள் வெளியாவில்லை.
இந்த நோயின் அறிகுறிகளாக, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, அடிநா அழற்சி, முகத்தில் தடிப்புகள் மற்றும் மூட்டுகளில் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கூறப்படுகிறது.