வறுமையை காட்டி மோசடி செய்வோர் அதிகரித்துள்ளனர்: விழிப்பாக இருக்கவும்! தியாகி கோரிக்கை

#SriLanka #Jaffna
Mayoorikka
2 years ago
வறுமையை காட்டி மோசடி செய்வோர் அதிகரித்துள்ளனர்: விழிப்பாக இருக்கவும்! தியாகி கோரிக்கை

மக்களின் வறுமையை தமது யூடியூப் சனல்களில் காட்டி , தாம் அழைத்துக்கொண்டு செல்பவர்கள் தற்போது அதிகரித்துள்ளனர். 

அவ்வாறானவர்களிடம் வறுமையில் வாடுபவர்கள் சிக்கி விட கூடாது. அவ்வாறானவர்கள் தொடர்பில் ஏனையவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என தியாகி அறக்கொடை நிறுவனர் வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

 அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வறுமையில் வாடும் மக்களின் வறுமையை தமது யூடியூப் சேனல்களில் காணொளிகளாக வெளியிட்டு, அதனூடாக அந்த வறுமையில் வாடுபவர்களுக்கு வரும் உதவி தொகைகளை தாங்கள் எடுத்து செல்லும் பலர் தற்போது உருவாக்கி வருகின்றனர்.

 அவ்வாறானவர்களிடம் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அண்மையில் டுபாயில் உயிரிழந்த நபரின் சடலத்தை இலங்கை கொண்டு வருவதற்கு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கி இருந்தேன். அதேபோல் கனடா செல்வதற்கு முற்பட்ட வேளை வியாட்நாமில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை உயிர் மாய்த்த குடும்பஸ்தாரின் சடலத்தை இலங்கை கொண்டுவர நிதியுதவி வழங்கி இருந்தேன். அண்மையில் ஒரு வீடியோ பார்த்தேன். 

அந்த சடலங்களை இலங்கை கொண்டு வந்தது. தாம் தான் என கூறுகின்றார்கள். இவ்வாறு பொய்களை கூறி புலம்பெயர் நாட்டில் உள்ளவர்களிடம் பெருமளவான பணத்தினை பெற்று மோசடி செய்கின்றனர். 

அவர்கள் தொடர்பில் புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் , ஏனையவர்களும் அவதானமாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். அவ்வாறானவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஒரு சதம் கூட கொடுக்காதீர்கள். நான் யாரிடமும் பணம் பெற்று உதவி செய்வதில்லை. 

எனது சொந்த பணத்தில் உதவி செய்கிறேன். தற்போது எனது பிள்ளைகளும் தமது பங்குக்கு உதவ முன் வந்துள்ளனர். நான் கடந்த காலங்களில் வெளியில் தெரியாமல் பல உதவிகளை செய்தேன். 

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சொல்லுவார் , " நாலு பேருக்கு தெரிந்தால் தான் , உதவி தேவைப்படுவோர் எம்மை தேடி வருவார்கள் " என அதனால் தற்போது நான் நாலு பேருக்கு தெரிய கூடியவாறே உதவிகளை செய்கிறேன். அதன் ஊடாக உதவிகள் தேவைப்படுவோர் எம்மை நாட முடியும். தற்போது நாம் கல்வி செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து உதவி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். 

பணம் இல்லாமல் கல்வியை தொடர வில்லை என எவரும் சொல்ல கூடாது. தற்போது பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செயற்பாடு முடிவடையும் காலம் வரையில் அவர்களுக்கு மாதாந்த உதவி தொகைகளை வழங்கி வருகின்றோம். 

 அதேபோன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தளவு சம்பளம் வழங்கப்படுவதால் , அவர்களுக்கும் உதவி தொகைகளை வழங்கி வருகின்றோம். எதிர்காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செலவுக்கு என மாதாந்தம் உதவிகளை வழங்க தீர்மானித்து உள்ளேன். 

 உதவி தேவைப்படுவோர் , எனது இணைப்பாளர் ஊடாக தொடர்பு கொள்ள முடியும். நாம் அவர்களின் விபரங்களை பெற்று , அவர்கள் தொடர்பில் அறிந்து , அவர்களுக்கு எவ்வாறான உதவிகள் தேவை என அறிந்து உதவுவோம். அதேபோல கண் குறைப்பாடு காணப்படுவோருக்கு இலவச மூக்கு கண்ணாடி வழங்க தீர்மானித்து உள்ளேன்.

 கண்ணாடி தேவைப்படுவோருக்கு எனது இணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளை முடியும். நான் உதவி செய்கிறேன் என அறிந்ததும் , பலர் எனது இடத்தில் கூடிவிடுவார்கள். 

அதனால் அனைவரும் சிரமத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே உதவி தேவைப்படுவோர் எனது இணைப்பாளர்களை தொடர்பு கொண்டு உதவிகளை பெற முடியும். எனது இணைப்பாளராக ஊடகவியலாளர் முகுந்தன் செயற்படுகிறார் என மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!