ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் 06 பேர் பலி!
#Russia
#Ukraine
#War
#Lanka4
Thamilini
2 years ago
உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்துபேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து டெலிகிராமில் பதிவிட்டுள்ள டொனஸ்க் பிராந்திய ஆளுநர், பாவ்லோ கைரிலென்கோ காலை 10 மணியளவில் ஷெல் தாக்குதல் நடந்ததாகவும், சிறிய நகரத்தில் குடியிருப்புப் பகுதி தாக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பொலிஸார் களத்தில் பணியாற்றி வருவதாக தெரிவித்த அவர், ஒரு வீடும், கடையும் சேதமடைந்துள்ளதாகவும் கூறினார்.
லைமன் நகரம் கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள ஒரு முக்கிய ரயில் சந்திப்பு ஆகும்.