நாட்டின் பொருளாதார மீட்சியை இனிவரும் காலங்களில் காணலாம் - நந்தலால் வீரசிங்க!
நாட்டின் பொருளாதார மீட்சியை வருடத்தின் இரண்டாம் பாதியில் காணலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முந்தைய நிலவரத்தையும், தற்போதைய நிலவரத்தையும் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனத் தெரிவித்துள்ள நந்தலால் வீரசிங்க, எரிபொருள் மற்றும் எரிவாயு விலையும் தற்போது குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த ஆண்டு முழுவதும் ரூபாய் வலுவடைந்து வருகிறது எனக் கூறிய அவர், பங்குச் சந்தை விலைக் குறியீடு மிகவும் நேர்மறையாக இருப்பதை காணலாம் எனவும் தெரிவித்தார்.
எனவே ஆண்டின் இரண்டாம் பாதியில் பொருளாதார மீட்சியைக் காணலாம், அது தொடரும் என்று நாங்கள் நினைக்கிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.