அமெரிக்காவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 80 பேர் காயம்
#Accident
#America
#world_news
#Bus
#Breakingnews
Mani
2 years ago

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இரட்டை மாடி பேருந்தில் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேருந்து மன்ஹாட்டன் பகுதியை நெருங்கியபோது, எதிரே வந்த மற்றொரு பேருந்துடன் மோதியதில், உள்ளே இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து விபத்துக்குள்ளானது. நேருக்கு நேர் மோதியதில் முன்பக்க கண்ணாடி பல துண்டுகளாக உடைந்தது.
இதனை தொடர்ந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர், காயம் அடைந்த 80 பேரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில், பலத்த காயமடைந்த 18 நபர்கள் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் தற்காலிக பதற்றம் ஏற்பட்டது.



