புடின் எந்த அழுத்தமுமின்றி வழமைபோல் சாதாரணமாக உள்ளார் என்பதைக் காட்டும் செய்தி

#world_news #Russia #Girl
புடின் எந்த அழுத்தமுமின்றி வழமைபோல் சாதாரணமாக உள்ளார் என்பதைக் காட்டும் செய்தி

வெளி உலகில் கடுமையானவராக காணப்படும் ரஷ்ய அதிபர் புடின், சமீபத்தில் ரஷ்யாவில் சிறுமி ஒருவரை அழைத்து விருந்தளித்த நிகழ்வு சுவாரஸ்யமாக இருக்கிறது.

 ரஷ்ய அதிபர் புடின் சமீபத்தில் தாகெஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார். அப்பயணத்தின்போது புடின் பங்கேற்ற நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

 அவரை பார்க்க 8 வயது சிறுமியும் அங்கு வந்திருந்தார். ஆனால், புடினை அவரால் சந்திக்க முடியவில்லை. இதனை தாங்கிக்கொள்ள முடியாத அந்தச் சிறுமி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த வீடியோ வைரலாகியது.

 இந்த வீடியோ புடினின் பார்வைக்குச் செல்கிறது. இதனைத் தொடர்ந்து அச்சிறுமியையும், அவரது பெற்றோரையும் மாஸ்கோவுக்கு அழைப்பு விடுத்தார் புடின். 

அதன்படி இந்த வாரம் புடினை சந்தித்து அச்சிறுமி வாழ்த்து பெற்றார். அச்சிறுமியை நேரில் சந்தித்து ரஷ்ய அதிபர் புடின் ஆச்சரியத்தை அளித்திருக்கிறார். 

அதிபர் புட்டின் இச்சிறுமியை அவரது மாளிகையில் வைத்து, அவரமரும் கதிரையில் அமர்த்தி உரையாடியுள்ளார். இந்த சம்பவம் ரஷ்ய அரசினால் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!