ஜனாதிபதியுடன் இணக்கமாக செயற்படுவோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் - ஹிருணிகா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கப்பாடுடன் செயற்படுவோரை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச விரைவில் நடவடிக்கை எடுப்பார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடும் ஐக்கிய மக்கள் சக்தியினர் பற்றி தான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் நீண்டகாலம் செல்லும் முன்னர், அவர்களுக்கு எதிராக கட்சியின் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலக போவதில்லை எனக்கூறியுள்ள ஹிருணிகா, கட்சியை தூய்மைப்படுத்தி சரியான வழிக்கு கொண்டு வர முடிந்தளவில் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடும் போது அறிவை பயன்படுத்த வேண்டும் எனவும் சதுரங்க விளையாட்டை விளையாடுவது போல் அதனை செய்ய முடியாது எனவும் ஹிருணிகா மேலும் கூறியுள்ளார்.