தென்காசியில் உள்ள குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
#India
#Tamil Nadu
#Tourist
#Tamilnews
#waterfowl
Mani
2 years ago

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி உள்ளது. முக்கிய அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலிஅருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
மெயின் அருவி, மற்றும் ஐந்தருவி அருவிகளில் இரண்டு நாட்களுக்கு முன் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் இன்று அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



