மணிப்பூரில் நள்ளிரவு திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு
#India
#Earthquake
#Breakingnews
Mani
2 years ago

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது.
உக்ருல் மாவட்டத்தின் தென்மேற்கே தோராயமாக 13 கி.மீ தொலைவில் நள்ளிரவு 12.14 மணியளவில் 70 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.



