இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய இராஜதந்திரி!
#India
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
இந்தியாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக, இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்க, கடந்த வருடம், ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் 20ஆம் திகதி இந்த விஜயம் அமைய உள்ளதுடன், அமைச்சர்களான, அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கியத்துவமிக்க இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.