இவ்வருடம் வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை 150,000ஐத் தாண்டியுள்ளது
வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பணியகத்தில் சுமார் மூன்று இலட்சம் பணியாளர்களைக் கொண்ட குழு பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அதன் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 311,000 பேர் வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையர்கள் முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் போக்கு இருப்பதாகவும் பணிப்பாளர் வலியுறுத்துகிறார்.
"அதுமட்டுமல்லாமல், ருமேனியா மற்றும் ஜப்பான் அதிகளவில் வெளிநாட்டு வேலைகளைத் தேடுவதை நாங்கள் காண்கிறோம். ஒட்டுமொத்தமாக, இலங்கையர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கு உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.