வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பல்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
#SriLanka
#Dollar
Mayoorikka
2 years ago
இலங்கைக்கு கடந்த ஜூன் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஜூன் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 2822.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த மே மாதத்திற்கான வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.