கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை!

#SriLanka #Colombo #Lanka4
Thamilini
2 years ago
கொழும்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக  பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

அத்துடன்  கொழும்பில் இவ்வருடத்தில் 2,138 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,  அதிகளவான டெங்கு நோயாளர்கள் குருந்துவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.  

குறிப்பாக கொழும்பு நகரில் அதிகளவான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில்டெங்கு நோய் பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.ஆனால் அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!