2023 ஆம் ஆண்டு உயர்தர பரீ்ட்சைக்கான Online விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளுக்கான ஒன்லைன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி பரீட்சார்த்திகள் ஜுலை 07 முதல் வரும் 28 ஆம் திகதிவரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைய தளங்களான (www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic) அல்லது மொபைல் செயலியான ‘DoE’ மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர் மூலமாகவும், தனித்தேர்வாளர்கள் தாங்களாகவே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை விண்ணப்பதாரர்கள் அச்சிடப்பட்ட நகலை தங்களிடம் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.