பிரேசிலில் மக்கள் உறங்கிக்கொண்டிருந்த போது இடிந்து விழுந்த கட்டிடம் - 8பேர் பலி!
#world_news
#Lanka4
Thamilini
2 years ago
வடகிழக்கு பிரேசிலில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் குறைந்தது 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலின் வடகிழக்கு பெர்னாம்புகோ மாநிலத்தில், ரெசிஃபியின் புறநகரில் உள்ள ஜங்கா பகுதியில் தான் குறித்த அனர்த்தம் நேற்று (ஜுலை 07) இடம்பெற்றுள்ளது.
மக்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது நேர்ந்த இந்த அனர்த்தத்தில், ஐந்துபேரை காணவில்லை என மீட்பு குழுவினர் அறிவித்துள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.குறித்த கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் வெளியாகவில்லை. ஆனால் குறித்த பகதியில் சமீபகாலமாக தொடர் மழை பெய்து வருவதாகவும், இதனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பெர்னாம்புகோ கவர்னர் ராகுல் லைரா, அதிக மழை எதிர்பார்க்கப்படுவதாக எச்சரித்தார், உள்ளூர்வாசிகள் பாதுகாப்பான கட்டமைப்புகளை அணுகுவதை உறுதிசெய்யுமாறும் அவர் பரிந்துரைத்துள்ளார்.