அபாய நிலையில் உள்ள இலங்கை: நாட்டை விட்டு வெளியேறும் மக்கள்! சர்வதேச ஊடகம் அறிக்கை
இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிகளவு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக சர்வதேச ஊடகமான AFP செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில்கடவுச் சீட்டு எடுப்பதற்காக மக்கள் அதிகளவு வரிசையில் நிற்பதாகவும் அது சுட்டிக் காட்டியுள்ளது.
நாட்டில் உள்ள நிலைமை சரியாகவில்லை என்பதால் அவர்கள் வெளிநாடுகளுக்கு குடி பெயர விரும்புகின்றனர்.
எங்கள் குழந்தைகளின் நிலையில் இருந்து கருத்தில் கொள்ளும்போது, நாட்டை விட்டு வெளியேறுவது நல்லது என்றும் நியூசிலாந்து போன்ற ஒரு நாட்டிற்கு குடிபெயர விரும்புகிறோம்." என இலங்கையில் உள்ள ஒரு குடும்பம் தெரிவித்துள்ளது.
அதிக வாழ்க்கைச் செலவுகள் மற்றும் வரிகள் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயரத் தன்னைத் தூண்டியதாக ஒரு மென்பொறியிலாளர் கூறியுள்ளார்.
இந்த வருடம் மே மாதம் வரை 433,000 வெளிநாட்டு பயண ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், குடிவரவு பணியகம் சுமார் 122,000 பேர் வெளியேறியதாகப் பதிவுசெய்துள்ளது.
பலர் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் பிற இடங்களில் வேலை தேடுவதற்காக சுற்றுலா விசாவில் வெளியேறியதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க இணையவழி ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் வசதியை அரசாங்கம் அமுல்படுத்தியது.
இலங்கை பல தசாப்தங்களாக தொழிலாளர் ஏற்றுமதியாளராக இருந்து, திறமையான தொழிலாளர்களை குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றது.
நாட்டை விட்டு கல்வியலாளர்கள் வெளியேறுவதால் உள்நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் கட்டுமானத் துறையும் அதிகளவில் , திறமையான தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களை இழந்து அபாயத்தில் உள்ளதாக அறிக்கையிட்டுள்ளது.
நடுத்தர வர்க்கத் தொழிலாளர்கள் உள்நாட்டில் வறுமையிலிருந்து தப்பிக்க வெளிநாட்டில் வேலை தேடுகிறார்கள் என்று என்று அந்தச் செய்தி கூறியுள்ளது.